Full Article
ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எல்.பி.ஜி பற்றாக்குறை ஏற்பட்டது. இதையொட்டி, கடந்த மார்ச் மாதம், வணிக சிலிண்டர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு. அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அறிக்கை கூறும் முக்கிய புள்ளிகள்... > வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் இருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அரசு நீக்கியுள்ளது. சிலிண்டர்அமலுக்கு வரும் பாஸ்போர்ட் திருத்தச் சட்டம்; ஏறும் பாஸ்போர்ட் கட்டணம்; எவ்வளவு, எப்போது முதல்? > தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'பல்க் எல்பிஜி' (Bulk LPG) விநியோகம், இப்போது நெருக்கடிக்கு முந்தைய நுகர்வு அளவில் 50% வரை தளர்த்தப்பட்டுள்ளது. இது வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்குப் பெரியளவில் கைகொடுக்கும். > மேற்கு ஆசிய நெருக்கடியின்போது, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் (Essential Commodities Act) கீழ் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதன்படி, பெட்ரோகெமிக்கல் மற்றும் இதர பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த C3-C4 ரசாயனக் கலவைகளை (C3-C4 streams), எல்பிஜி உற்பத்திக்காக மட்டுமே பிரத்யேகமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மடைமாற்றம் செய்யப்பட்டது. தற்போது, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இறக்குமதி செய்யப்படவுள்ள எல்பிஜி சரக்குகளின் வரத்தைக் கணக்கில் கொண்டு, எல்பிஜி உற்பத்திக்கு மாற்றப்படும் C3/C4 கலவைகளின் அளவைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. Gold: நகை வாங்குவதற்கும் சரி, முதலீடு செய்வதற்கும் சரி இதுதான் சூப்பர் நேரம்; ஆனால்...? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



