நெல்லை, பணிச்சுமை என நெல்லை மாநகர காவல் ஆணையாளருக்கு ஆடியோ அனுப்பிய தலைமைக் காவலர் ஜோயல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட காவல் துறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ஜோயல் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சுமார் 24 ஆண்டுகளுக்கு மேலாக காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நெல்லை மாவட்ட காவல் ஆணையாளருக்கு கடுமையான பணிச்சுமை குறித்தும், தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கை குறித்தும் ஆடியோ ஒன்று அனுப்பி வைத்துள்ளார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில், கடந்த 35 நாட்களாக அவருக்கு கடுமையான பணிச்சுமை கொடுக்கப்பட்டு வருவதாகவும் காவல் ஆய்வாளர் அழகர் தனக்கு கடுமையான மன உளைச்சலும் பணியில் அதிக தொந்தரவும் கொடுத்து வருகிறார். இதனால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுளேன். தற்போதைய சூழ்நிலையில் தான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு தள்ளப்பட்டுளேன் என்று பதிவு ஆடியோ அனுப்பியுள்ளார். காவல் துறையில் பணிபுரியும் தலைமை காவலர் தனது உயர் அதிகாரி மீது குற்றசாட்களை முன் வைத்து வெளியிட்ட ஆடியோ நெல்லையில் பெரும் அதிர்வளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நெல்லை மாவட்ட காவல் ஆணையாளர் தலைமை காவலர் ஜோயல் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். முறையாக உயர் அதிகாரியிடம் புகார் தெரிவிக்காமல் தற்கொலை மிரட்டல் விடுத்தது ஆடியோ வெளியிட்டதற்காக கூறி அவரை சஸ்பெண்ட் செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தன்னை துப்புறுதியதாக கூறி காவல் ஆய்வாளர் மீது குற்றசாட்டை முன்வைத்த நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கூறிய தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநகர காவல்துறையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/workload-police-officer-who-released-audio-suspended




