துபாய், பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதுகிறது. ஆசிய கோப்பை 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இரு பிரிவுகளாக 8 அணிகள் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், தாய்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். தாய்லாந்துடன் இன்று பலப்பரீட்சை தொடரின் 3-வது நாளான இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில், இந்திய அணி, தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 ஆகிய சேனல்களில் நேரடியாக காணலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-cricket-india-to-face-thailand-today




