வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள்! திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடி மதிப்பில் புதிய வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது - வேளாண் அமைச்சர் வினோத் 1000 மெ.டன் சேமிப்பு கிடங்கு 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் ரூ.4.80 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் கடலோர மாவட்டங்களில் நீலப் பசுமை தோட்டக்கலை கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து, மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்வதை ஊக்குவிக்க ரூ.49.4 லட்சம் நிதி ஒதுக்கீடு - -வேளாண் அமைச்சர் வினோத் மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் ஆயிரம் ஏக்கர் பாசனம் பரம்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைத்தல் அதிகபட்ச மானியம் 60% ரூ.6 கோடி ஒதுக்கீடு - -வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் இ- வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த, 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும் -வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள் அமைத்திட மானியம் வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்படும் 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் தூர்வாருதல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் 1,720 ஏக்கரில் 1.51 கோடியில் மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் - வேளாண் அமைச்சர் வினோத் உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம் புளுபெரி அவகோடா, கிவி உள்ளிட்டட உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.இதற்காக ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத் மாவட்ட அளவிலான "வெற்றி விவசாயி" விருது நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள். பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களை இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் "வெற்றி விவசாயி விருது" வழங்கப்படும் முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள் வழங்கப்படும்; இதற்காக ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும் - அமைச்சர் வினோத் வெங்காய சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும் வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும் -வேளாண் அமைச்சர் வினோத் நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் காடுகள் திட்டம் விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ஏதுவாக தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் தரமான பருத்தி உற்பத்தியை பெருக்கிட ஏதுவாக பருத்து மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத். பனை பாதுகாப்பு திட்டம் பனை நடுவோம். பலன் பெறுவோம் என்பதன் அடிப்படையில் பனை பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத். அஞ்சலை அம்மாள் பெயரில் விருது மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும். அஞ்சலை அம்மாள் பெயரில் முதல் பரிசு ரூ.2.50 லட்சம். 2-வது பரிசு ரூ.1.50 லட்சம், 3-வது பரிசு. ரூ.1 லட்சம் வழங்கப்படும் - வேளாண் அமைச்சர் வினோத் மாடித்தோட்டம் ரூ.10 கோடி ஒதுக்கீடு மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு தளிர்கீரைகள் திட்டம் சிறிய தளிர்.பெரிய ஆரோக்கியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் நம்மாழ்வார் விருது 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் விதை சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் கருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு -அமைச்சர் வினோத் தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும் சாமை, தினை, வரகு, குதிரை வாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும். இத்திட்டதிற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத். 43,500 தார்ப் பாய்கள் வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு மழை வெயிலிருந்து விளை பொருட்களை பாதுகாக்க 43,500 தார்பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத் வேளாண் கண்காட்சி நடத்தப்படும் தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் காட்டுப்பன்றிகளால் பயிர் இழப்பு காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்திற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் மக்காச்சோள உற்பத்தி - ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத் இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு. உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை - அமைச்சர் வினோத். விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை உயிர்ம உரப்பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை -அமைச்சர் வினோத். வேளாண் தொழில் நுட்பம் உங்கள் விரல் நுனியில்! ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத் தரமான விதை! வளமான விவசாயம்! நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத் வளமான மண்; வளமான வருங்காலம் மண்ணின் வளத்தை பாதுகாக்க” தமிழ்நாடு மணவள பாதுகாப்பு இயக்கம் -ரூ.122.51 கோடி ஒதுக்கீடு விவசாயிகளின் கருத்துகளை பெற்று நிதி நிலை அறிக்கை "விவசாயிகள், ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை பெற்று நிதிநிலை அறிக்கை. விவசாயிகளுக்கான முன்னோடி திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு. சிஎம் வகுத்துக் கொடுத்த சீரிய தொலைநோக்கு திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை. செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்வதோடு, புதிய திட்டங்கள் அறிமுகம். வேளாண்மை பாதித்தால் எந்த துறையும் செயல்பட முடியாது என்று கூற்றுக்கு ஏற்ப பட்ஜெட் - அமைச்சர் வினோத் சபாநாயகர் அறிவுரை முதல்-அமைச்சரை புகழ்ந்து அமைச்சர் படித்த சில பகுதிகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வேளாண் அறிக்கையில் உள்ளதை மட்டும் படிக்க அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார். கோட் சூட் போட்ட விவசாயி முதல்-அமைச்சர் விஜய்: வினோத் புகழாரம் கோட் சூட் போட்ட விவசாயி நீங்கள். ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. நீங்கள் கொண்டாடப்படும் வரம். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்; அமைச்சர் வினோத் த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். ஈபிஎஸ் வருகை இன்று தவெக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டமன்ற வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். வணக்கம் தெரிவித்துக் கொண்ட முதல்-அமைசர் விஜய் – ஈபிஎஸ் சட்டப்பேரவை இன்று காலை தொடங்குவதற்கு முன்பாக, சட்டப்பேரவை வளாகத்தில் முதல்-அமைச்சர் விஜய் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். கருப்பு சட்டையில் வந்த திமுக எம்.எல்.ஏ-க்கள் தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வருகை தந்தனர். சென்னை, தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் 5-ந்தேதி தாக் கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பல் வேறு வாக்குறுதிகளை விஜய் அளித்து இருந்தார். எனவே பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் நேற்று (05.08.2026) தாக்கல் செய்தார். இதில், ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இந்தநிலையில், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா? விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்குமா? என்ற வகையில் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-agriculture-budget-will-it-please-farmers-immediate-update




