சென்னை, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்! இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- வ.உ. சிதம்பரம் பிள்ளை இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராக திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர் என பன்முக தன்மை பெற்றவருமான 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 155-ஆவது பிறந்த நாளான 5.9.2026 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ. சிதம்பரம் பிள்ளை நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ப. மோகன், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, கழக மகளிர் அணிச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், கழக அமைப்பு செயலாளர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் (பொறுப்பு) முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், கழக வர்த்தக அணி செயலாளர் தூத்துக்குடி மாநகர கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் என். சின்னத்துரை, கழக அமைப்பு செயலாளர், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் எஸ். சரவணபெருமாள், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். நிகழ்ச்சி இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மரியாதை வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/v-u-c-155th-birthday-aiadmk-tribute-ottapidaram




