சென்னை, மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம், புலிப்பாக்கம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிகிச்சை இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், பஸ்சில் பயணித்த மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மாற்று அரசு பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பஸ் சாலையின் நடுவே கவிழ்ந்ததால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர், விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-on-trichy-chennai-national-highway-3-injured




