லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் கோமதி நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் திவ்யா மிஸ்ரா(வயது 37) என்ற பெண் வேலை செய்து வந்தார். இவரது கணவர் மனஸ் மிஸ்ரா. இவரும் வங்கி ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரிடையே சமீப காலமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மனஸ் மிஸ்ரா, தனது மனைவி வேலை செய்யும் வங்கிக்கு சென்றார். வங்கிக்கு வெளியே நின்றபடி திவ்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், உடனடியாக வெளியே வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து வெளியே வந்த திவ்யாவை, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு மனஸ் மிஸ்ரா அங்கிருந்து தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த திவ்யா மிஸ்ரா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். திவ்யாவை கொலை செய்தது அவரது கணவர்தான் என்பதை உறுதி செய்த போலீசார், உடனடியாக மனஸ் மிஸ்ராவை தேடத் தொடங்கினர். இந்த நிலையில், மனஸ் மிஸ்ரா ஹசாரியா பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். மேலும், தற்கொலைக்கு முன்னதாக தனது சகோதரி ஷீபாவையும் அவர் சுட்டுக் கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/bank-employee-commits-suicide-after-shooting-dead-wife-and-sister-shocking-incident-in-uttar-pradesh




