'வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்' என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்ததோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டமும் நடத்தினர். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆய்வில் ஈடுபட்டதற்காக மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வன்னியரசு மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றுன் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன், "நேற்றைய தினம் மதுரை வந்த ஆளுநர் அர்லேகர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததாக செய்திகளில் வந்திருந்தது. ஆய்வு நடக்கவில்லை மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தோம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நான் அதற்குள் போக விரும்பவில்லை ஆனால் இரு விஷயத்தை மட்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்யும் சட்ட உரிமை எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. சட்டம் வழங்கியிருக்கிற அந்தக் குழுவின் (மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைல்பு மற்றும் கண்காணிப்புக் குழு) தலைவர் நான். உறுப்பினர்கள் இங்கே இருக்கிறார்கள். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் பல துறைகளில் ஆய்வு செய்வதற்கு சட்டம் எங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறது. எங்கள் உரிமையை வேறு யாருக்கும் விட்டு தர மாட்டோம். ஒருவேளை அப்படி யாராவது ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரியையாவது அழைத்தால் யாரும் பங்கேற்கக் கூடாது. அப்படி பங்கேற்றால் அவர்களுக்கு சம்மன் அனுப்பட்டு விளக்கம் கேட்கபடும். அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற 39 அமைச்சர்களுக்குக் கீழ் வருகிற 96 துறைகளையும் ஆய்வு செய்கிற பொறுப்பு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுக்குத்தான். இது மதுரை மாவட்டத்தில் 100 சதவீதம் வேலை செய்கிறது" எனத் தெரிவித்தார். ‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி - என்ன நடந்தது மதுரையில்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/mp-su-venkatesan-order-to-officials-regards-governors-review-meet




