சேலம், சுபமுகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் நேற்று பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குண்டுமல்லி கிலோ ரூ1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் விலை உயர்வு சேலம் கடைவீதி பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க் கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள் ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இன்று (ஞாயிற் றுக்கிழமை) சுபமுகூர்த்த நாள் மற்றும் நாளை (திங்கட்கிழமை) விநாய கர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று குண்டுமல்லி, சன்னமல்லி உள்ளிட்ட பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. அதாவது கடந்த வாரம் கிலோ ரூ.600 வரை விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.1,600-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.400 வரை விற்பனையான சன்னமல்லி நேற்று ரூ.1,300-க்கும், கடந்த வாரம் ரூ.280 வரை விற்கப்பட்ட ஜாதிமல்லி நேற்று ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டன. வெள்ளை அரளி, காக்கட்டான் இதேபோல் காக்கட்டான், கலர் காக்கட்டான், மலை காக்கட்டான் ஆகியவை கிலோ ரூ.400-க்கும், அரளி 240-க்கும், வெள்ளை அரளி, மஞ்சள் அரளி, ஐ.செவ்வரளி ஆகியவை தலா ரூ.300-க்கும், நந்தியா வட்டம் ரூ.450-க்கும், சிந்தியா வட்டம் ரூ.800-க்கும், சாமந்தி ரூ.500-க்கும், சாதா சம்பங்கி ரூ.600-க்கும் விற்கப்பட்டன. வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதி கமாக இருந்தது. விலை உயர்வால் அவர்கள் பூக்களை குறைவாக வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சுப முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/auspicious-day-and-vinayagar-chaturthi-flower-prices-skyrocket




