'பிரேமலு' படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்திருக்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் நாளை திரைக்கு வருகிறது. Premalu 'பிரேமலு' கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்திருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்தப் படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸுக்கு அளித்த நேர்காணலில் இந்தப் படம் பற்றியும், 'பிரேமலு 2' பற்றியும் இயக்குநர் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "ஒரு நபர், தன்னைவிட வயதில் மிகவும் இளைய பெண்ணைக் காதலிக்க நேர்ந்தால் என்னவாகும்? நிஜ வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். 2019-லேயே இக்கதையின் ஐடியா தோன்றியது. அதோடு கிறிஸ்தவக் குடும்பப் பின்னணி, அவர்களின் அன்றாட வாழ்க்கை என இந்தப் படத்திற்கான உலகத்தை உருவாக்கினேன். இக்கதையை உருவாக்கும்போது கதாநாயகனாக நடிகர் நிவின் பாலி என் மனதில் இல்லை. இந்தக் கதாபாத்திரத்தை நான் சுதந்திரமாகவே உருவாக்கினேன். Girish AD - Nivin Pauly - Mamitha Baiju ஆரம்பத்தில் இந்தக் கதையை நடிகர் ஆசிஃப் அலியிடம்தான் கூறினேன். அப்போது வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்காகத் திட்டமிடப்பட்டு, பின்னர் அது தள்ளிப்போனது. அதன்பிறகுதான் 'பாவனா ஸ்டுடியோஸ்' உள்ளே வந்தார்கள். அவர்களிடம் 'பிரேமலு' கதையோடு சேர்த்து இந்தக் கதையையும் கூறினேன். இரண்டுமே பிடித்துப்போகவே, அடுத்தடுத்து படங்களைச் செய்ய முடிவெடுத்தனர்" என்றவர், 'பிரேமலு 2' குறித்து, "அது முடிந்துபோன கதை. நானும் எனது இணை எழுத்தாளர் கிரண் ஜோசியும் தற்போது வேறு ஒரு புதிய கதையில் பணியாற்றத் தொடங்கிவிட்டோம்" எனத் தெளிவுபடுத்தியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/mollywood/bethlehem-kudumba-unit-girish-ad-nivin-pauly-premalu-2




