நாகப்பட்டினம், அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று தஞ்சை மறை மாவட்ட ஆயர் அறிவித்துள்ளார். புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் இந்த ஆலயம் ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது. 10 நாள் திருவிழா இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த (ஆகஸ்ட்) மாதம் 29-ந்தேதி கொடியேற்றுடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாள் வெகு விமரிசையாக நடைபெற்றது. 24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்த நிலையில் வருகிற அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என்று தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தெரிவித்துள்ளார். பக்தர்கள் எந்த நேரத்திலும் பேராலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஆயர் சகாயராஜ் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-basilica-to-remain-open-24-hours-from-october-3




