மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தங்கத்திலும் வெள்ளியிலும் எளிதாக முதலீடு செய்யலாம்! தங்க, வெள்ளி நகைகளை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்கிற வகையில் பெரும் இழப்பு ஏற்படுகிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் வாங்கும்போது தங்கம், வெள்ளிக்கு உரிய விலையேற்றப் பலன் கிடைத்துவிடுவதுடன், செய்கூலி, சேதாரம் என்கிற பேச்சே இல்லை. தவிர, அவற்றைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தேவைப்படும்போது எளிதாக விற்று பணமாக்கிக்கொள்ளவும் முடியும். பொதுவாக, தங்க, வெள்ளி நகைகளை வாங்கும்போதும் விற்கும்போதும் பலரும் பணமாகவே தந்து, பணமாக திரும்பப் பெறுவதால், வரிப் பிரச்னையில் இருந்து தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நாம் முதலீடு செய்யும்போது அது நமது பான் கார்டில் பதிவாகிவிடுகிறது. எனவே, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தங்கம், வெள்ளி வாங்கும்போது அதன்மூலம் கிடைக்கும் லாபத்துக்கு நாம் கட்டாயம் வரி செலுத்தியாக வேண்டும். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. கோல்டு இ.டி.எஃப் மியூச்சுவல் ஃபண்ட் தங்கத்தை இ.டி.எஃப் மற்றும் இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் ஆகிய முறைகளின் மூலம் வாங்கலாம். இ.டி.எஃப் என்பது பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குவதற்கு ஒப்பானது. இ.டி.எஃப் முறையில் தங்கத்தில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியம். டீமேட் கணக்கு இல்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்ய இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யலாம். இந்த இரண்டு முறைகளின் மூலமும் தங்கத்தின் விலையேற்றத்தினால் ஏற்படும் பலனை நம்மால் அனுபவிக்க முடியும். முதலீடு செய்வதும் எளிது; பணத்தைத் திரும்ப பெறுவதும் எளிது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் இப்படி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தாலும், இவற்றுக்கான வரி விதிமுறைகள் வித்தியாசப்படுகின்றன. அந்த வித்தியாசங்கள் என்ன? முதலில் கோல்டு இ.டி.எஃப் திட்டங்களைப் பார்ப்போம். தங்கம் கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு, அந்த ஓராண்டு காலத்துக்குள் விற்கும்பட்சத்தில் கிடைக்கும் லாபத்துக்கு உங்கள் வருமானத்துக்கு எத்தனை சதவிகிதம் வரி கட்ட வேண்டும். உதாரணமாக, நீங்கள் ரூ.10 லட்சத்தை கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள். ஒரே ஆண்டில் அது ரூ.12 லட்சமாக உயர்ந்துவிடுகிறது. அதை ஓராண்டு என்கிற குறுகிய காலத்துக்குள் நீங்கள் விற்க நினைத்தால், லாபமாகக் கிடைக்கும் பணம் ரூ.2 லட்சம் உங்கள் ஆண்டு வருமானத்துடன் சேர்க்கப்படும். உங்கள் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் ரூபாய் எனில், லாபமாகக் கிடைத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, ரூ.14 லட்சத்துக்கு நீங்கள் எத்தனை சதவிகிதம் வரி கட்ட வேண்டுமோ, அந்தளவுக்கு வரி கட்ட வேண்டும். ஆனால், இந்த முதலீட்டை ஓர் ஆண்டு காலத்துக்குப் பிறகு நீண்ட கால நோக்கில் நீங்கள் முதலீட்டை விற்கும்பட்சத்தில் கிடைக்கும் லாபத்துக்கு 12.5% மட்டும் வரி கட்டினால் போதும். அதாவது, உங்களுக்குக் கிடைத்த லாபம் ரூ.2 லட்சத்துக்கு 12.5% மட்டும் வரி கட்டினால் போதும். மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறவர்கள், குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்கு மேல் முதலீடு செய்தால், அதிக வரியைக் கட்டுவதைத் தவிர்க்க முடியும்! வரி இதுவே கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு வரி கட்டவேண்டும்? இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்போது குறைந்த காலம் என்பது இரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, நீங்கள் செய்த முதலீட்டை 24 மாதங்களுக்குள் திரும்பப் பெறும்போது கிடைக்கும் லாபம் உங்கள் ஆண்டு வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அதற்கு எத்தனை சதவிகிதம் வரி கட்டவேண்டுமோ அந்தளவுக்கு வரி கட்ட வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டு மேற்பட்டு முதலீட்டை விற்கும்போது 12.5% மட்டும் வரி கட்டினால் போதும். ஆக, கோல்டு இடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் பணத்தைத் திரும்ப எடுத்தால், அதிகளவில் வரி கட்டுவதைத் தவிர்க்க முடியும்! இனி கோல்டு இ.டி.எஃப் திட்டத்திலும், கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டத்திலும் முதலீடு செய்யும்போது அதிக வரி கட்டாமல் இருக்க நீண்ட காலத்தில் முதலீடு செய்யுங்கள்! லாபம் முதலீட்டு ஆலோசனை வேண்டுமா? வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிப்போருக்கு: இந்தியாவில் வசிப்போருக்கு: Labham Youtube Channel: Labham Website: முதலீட்டாளர்களின் கவனத்துக்கு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/personal-finance/gold-etf-gold-etf-fof-explained-in-tamil




