கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கருவின் பாலினம் கண்டறிதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா?, பெண்ணா? என பாலினம் கண்டறிந்து கூறுபவர்கள், கருக்கலைப்பு செய்பவர்கள், போலி டாக்டர்களை கண்டறிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், நர்சு கிருத்திகாவை வைத்து நடத்திய சோதனையில், போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் (வயது 32) என்பவர் சட்டவிரோதமாக பாலினம் கண்டறிவது தெரியவந்தது. 2 பேர் கைது இதற்காக ராயக்கோட்டைக்கு ஸ்கேன் எந்திரத்துடன் வந்த எஸ்தரை, மருத்துவக்குழுவினர் அங்கு மறைந்திருந்து சினிமா பாணியில் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் எஸ்தர் மருத்துவம் படிக்காமல் பாலினம் கண்டறிந்ததுடன், அவருக்கு உதவியாக திருப்பத்தூரைச் சேர்ந்த குருமூர்த்தி(32) என்பவரும் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-2-people-arrested-for-identifying-and-revealing-the-sex-of-a-fetus




