சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார் மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரிப் படுகையில் போதிய மழைப்பொழிவு கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய், 01.09.2026 அன்று, மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார்கள். 2026–2027 பாசன ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு 41.223 டி.எம்.சி. மட்டுமே இருந்தது. கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர்த் தேவைகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முன்பு தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நீர்த் தேவைகள் வலியுறுத்தப்பட்டதுடன், மாண்பமை உச்ச நீதிமன்றத்திலும் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரை உறுதி செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டின் எல்லையான பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி, 9,000 கனஅடி மற்றும் 12,000 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அதனை உறுதி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கான உரிமை தொடர்ந்து நிலைநாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாண்பமை உச்ச நீதிமன்றத்தை அணுகி, விகிதாசார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிமைகளைப் பாதுகாப்போம் வரவேண்டிய நீரைப் பெறுவதற்காக இந்த அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்பதில் இந்த அரசு அசைக்க முடியாத உறுதியுடன் உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதையும், எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் வடகிழக்குப் பருவமழையையும் கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் டெல்டா பாசனத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, நிலங்களை உழுது தயார் செய்தல், நாற்றங்கால் அமைத்தல், விதைப்பு மேற்கொள்ளுதல், தரமான விதைகள், உரங்கள் மற்றும் பிற வேளாண் இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். குறுகிய கால மற்றும் நடுத்தர கால நெல் ரகங்கள் உள்ளிட்ட பொருத்தமான பயிர் ரகங்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும். நீரை சிக்கனமாக பயன்படுத்திடுக. விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும் திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும், கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும் அதிகபட்ச பாசனப் பயனை அளிப்பதையும் “ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்” கிடைப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-release-water-from-mettur-dam-on-september-1st



