சென்னை, பெரம்பூரில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் முதல்-அமைச்சர் விஜய். அலுவலகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார். தேர்தல் வெற்றிக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்துள்ளார். பெரம்பூர் தொகுதி அலுவலகம் முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலக வளாகத்தில் இ -சேவை மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள நியாய விலைக் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கினார். பொது இ - சேவை மையத்தை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விஜய் கேட்டறிந்தார். பெரம்பூர் தொகுதிக்கான ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் கொண்டுவரப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் நிகழ்சியில் பங்கேற்றனர். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இன்று முதல் முறையாக அவர் தனது தொகுதிக்குச் சென்றதால் அவருக்கு த.வெ.க. நிர்வாகிகள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதிய செயலி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில், பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு ‘மக்கள் சேவை தளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் இந்த பிரத்யேக செல்போன் செயலியையும் நாளை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். விஜய்க்காக தனி அறை அலுவலகத்தின் முன்பகுதியில், "பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச. ஜோசப் விஜய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய்க்காக தனி அறையும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தினுள் தனியாக கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்மார்ட் ரேஷன் அட்டையை வழங்கினார் முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூரில் உள்ள ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். புதிய ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 50 பேருக்கு வழங்கி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். புதிய ரேஷன் கடையில் 10 குடும்பங்களுக்கு அடையாளமாக ரேஷன் பொருட்களை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-inaugurates-perambur-mla-office




