திருச்சி, ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது: 42). இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், 5ஜி டவர் அமைப்பது தொடர்பான விளம்பரம் மற்றும் செல்போன் நம்பர் இருந்தது. உடனே, அவர் அந்த மொபைல் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர், 'செல்போன் டவர் அமைக்க உங்களிடம் நிலம் உள்ளதா?' எனக் கேட்டுள்ளார். அதற்கு மலர்மன்னன், தனது மனைவி பெயரில் நிலம் திருச்சியில் உள்ளது எனத் தெரிவித்தார். உடனே, அந்த மர்ம நபர் நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். பின்னர், 'செல்போன் நிறுவனம் மூலமாக ரூ. 15 லட்சம் முன்பணமாகச் செலுத்த இருக்கிறோம். அதற்கு ஆவண கட்டணமாக ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளனர். trichy இதனை நம்பிய மலர்மன்னன் அந்த மர்ம நபர் கொடுத்த வங்கிக் கணக்குக்குக் கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.2 லட்சத்தை அனுப்பினாா். ஆனால், அதன்பிறகும் அந்த மா்ம நபா் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தபோதுதான் இவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சைபா் குற்றப் பிரிவில் இணையதளம் வழியாக மலா்மன்னன் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருச்சி: டிப்பர் லாரி முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை; இளைஞரின் பின்னணி குறித்து போலீஸ் விசாரணை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/well-pay-15-lakh-to-install-cell-phone-tower-online-scam-targets-a-worker




