ஆஸ்கர் விருதின் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவுக்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி படமான 'கோந்தல்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பரிந்துரை குறித்துப் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்த விமர்சனம் தற்போது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அனுராக் காஷ்யப் இந்தப் படம் குறித்து அனுராக் காஷ்யப், "ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா தொடர்ந்து முற்றிலும் தவறான படங்களையே தேர்வு செய்து வருகிறது. தகுதியான சிறந்த படங்களைத் தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தும், அதை நாமே கெடுத்துக் கொண்டோம். இந்தத் தேர்வுக் குழுவின் முடிவுகளில் அளவுக்கு அதிகமான அரசியலும் விழிப்புணர்வின்மையும் இருக்கின்றன. தற்போது தேர்வாகியுள்ள 'கோந்தல்' படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் அதைப் பற்றி இப்போதே எதுவும் கருத்துச் சொல்ல முடியாது. ஆனால், ஆஸ்கருக்கு அனுப்பப்படும் படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விளம்பரங்களுக்காகப் பணத்தை வீணடிப்பது தேவையில்லாதது" எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து 'கோந்தல்' இயக்குநர் சந்தோஷ், "இயக்குநர் அனுராக் காஷ்யப் சார் மீதும் அவரது படைப்புகள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. கடந்த ஏப்ரல் மாதம் மும்பை விமானப் பயணத்தின் போது, 'கோந்தல்' படம் பற்றி அவரிடம் நேரில் எடுத்துரைத்தேன். அப்போதே அவர் இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்றும், கண்டிப்பாய்ப் பார்ப்பதாகவும் கூறினார். படம் எடுப்பதே பார்க்கத்தான்! Gondhal Movie தயவுசெய்து எந்தவொரு முடிவிற்கும் வரும் முன், முதலில் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சியுங்கள். சினிமா பின்னணி எதுவுமில்லாத ஒரு அறிமுக இயக்குநராக, மராத்தி கலாச்சாரத்தை வைத்து இந்த த்ரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறேன். இது திரையரங்குகளுக்காக உருவாக்கப்பட்ட படம். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பு எங்களுக்கு நன்றாகவே தெரியும், கண்டிப்பாய் நாட்டின் பெருமையைக் காப்பாற்றுவோம்" எனத் தெரிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/bollywood/anurag-kashyap-oscar-selection-row-gondhal-director-santosh-response




