ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 47). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மகள் மதுமிதா (21). இவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வந்தார். சுரேஷ் பாபுவின் மனைவி மஞ்சுளாவுக்குத் தாய் வீடு திருத்தணி. திருத்தணியில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முன்கூட்டியே புறப்பட்டு வந்துவிட்டார் மஞ்சுளா. இந்த நிலையில், சுரேஷ் பாபு தனது மகள் மதுமிதாவை இன்று அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சித்தூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்துகொண்டிருந்தார். விபத்து பகுதி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்துள்ள பில்லாஞ்சி பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக இவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சுரேஷ்பாபுவும், மகள் மதுமிதாவும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்ததும் சோளிங்கர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம், அவர்களின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/accidents/father-and-daughter-died-after-bus-hits-two-wheeler-near-sholinghur




