போபால், போபால், கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். சிக்கன் பிரியாணி கடந்த மார்ச் மாதம் வாரணாசி கங்கை நதியில், ரமலான் நோன்பு துறப்பதற்காக சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்து அமைப்புகளின் போலீசில் புகார் அளித்தனர். ஜாமீன் இதன் பேரில் 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வாரணாசி நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், கடந்த மே மாதமே அலகாபாத் ஐகோர்ட் இவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நீதிபதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய சட்டப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உஜ்ஜல் புயான், நாட்டின் தற்போதைய கருத்துச் சுதந்திர நிலை குறித்து பேசியதாவது:- ஜனநாயக உரிமை கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதைத் தடை செய்ய நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை. பிரியாணி சாப்பிடுவது ஒரு குற்றமே கிடையாது; அதை ஒருபோதும் குற்றமாக பார்க்க முடியாது. குற்றம் அல்லாத ஒரு செயலுக்காக 14 பேரை கைது செய்து, 3 மாதங்கள் ஜாமீன் தராமல் சிறையில் அடைத்தது வேதனையளிக்கிறது. நாட்டில் விமர்சனம் செய்வதும், அமைதியான முறையில் போராடுவதும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை ஆகும். இவ்வாறு அதில் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/no-law-against-eating-chicken-biryani-in-ganga




