பாரீஸ், பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஜினேடின் ஜிடேன் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினிடம் தோல்வி பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 14 ஆண்டுகளாக இருந்து வந்த டிடியர் டெசாம்ஸ் (57 வயது) கடந்த 19-ந் தேதி முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியுடன் அந்த பதவியில் இருந்து ஒதுங்கினார். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பிரான்ஸ் அணி உலகக் கோப்பை அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. 4-வது இடம் அத்துடன் அடுத்து நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்று 4-வது இடம் பெற்றது. டெசாம்ஸ் பயிற்சியின் கீழ் பிரான்ஸ் அணி 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று அசத்தியது. 2022-ம் ஆண்டு 2-வது இடம் பிடித்தது. ஜினேடின் ஜிடேன் டெசாம்ஸ் விலகியதை தொடர்ந்து பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்பின் முன்னாள் பயிற்சியாளருமான ஜினேடின் ஜிடேன் நியமிக்கப்பட்டுள்ளார். 1998-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கிய பங்கு வகித்த அவர் 108 சர்வதேச போட்டிகளில் ஆடி 31 கோல்கள் அடித்துள்ளார். அதிகாரபூர்வ அறிவிப்பு 54 வயதான ஜிடேன் 4 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக பிரான்ஸ் கால்பந்து சம்மேளன தலைவர் பிலிப் டியாலோ பாரீசில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். பிரான்ஸ் கால்பந்து சம்மேளன தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் முன்னிலையில் ஜிடேன் தனது பதவி பொறுப்பை ஏற்றார். பிரான்ஸ் அணி செப்டம்பர் 25-ந் தேதி நடைபெறும் நேஷன்ஸ் லீக் போட்டியில் துருக்கியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. அந்த ஆட்டத் தில் ஜிடேன் தனது பயிற்சியாளர் பணியை தொடங்குகிறார். 5 ஆண்டுகள் காத்திருந்தேன் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜிடேன் கூறுகையில், 'நான் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். எங்களிடம் அசாதாரணமான வீரர்களும், ஒரு அசாத்தியமான அணியும் உள்ளது. இந்த வாய்ப்புக்காக நான் 5 ஆண்டுகளாக காத்திருந்தேன். அதனால் தான் சற்று உணர்ச்சிவசப்படுகிறேன். பயிற்சியாளராக எனது வாழ்க்கையில் இது தான் மிகவும் மகிழ்ச்சியான நாள். நான் எப்போதும் இந்த அணியை ஒரு ரசிகராகவும், வருங்கால பயிற்சியாளராகவும் கவனித்து வந்திருக்கிறேன். அதனை நான் மறைக்கமாட்டேன். ரியல் மாட்ரிட் கிளப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு பிரான்ஸ் அணியை வழிநடத்த வேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பமாக இருந்தது. சவாலுக்கு தயார் இதனால் தான் மற்ற கிளப் அணிகள் என்னை பயிற்சியாளர் பொறுப்புக்கு அணுகியதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நட்சத்திரமாக ஜொலித்த அணியின் பொறுப்பை ஏற்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுள் பல உணர்ச்சிகள் அடங்கி உள்ளன. இந்த சவாலுக்கு தயாராக இருக்கிறேன்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/football/zinedine-zidane-replaces-didier-deschamps-as-france-head-coach-after-2026-wc-semis-exit-waited-5-years-for-this-exit




