சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15 முதல் 21-ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல் நினோ தாக்கம் காரணமாக இந்தாண்டு பருவமழை சற்று தாமதமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 13% குறைவாகப் பதிவான பருவமழை நடப்பாண்டுக்கான தென்மேற்குப் பருவமழை, இயல்பைவிட 13 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. மழைப் பற்றாக்குறையுடன் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் தென்மேற்குப் பருவமழை நிறைவடைந்தது. 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான 4-வது குறைந்த மழையளவு இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் கனமழை தனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/weather/when-does-the-northeast-monsoon-begin-in-tamil-nadu




