ஹனோய், வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், கேரளாவை சேர்ந்த 2 பேர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதே சமயம், விபத்தில் சிக்கிய 17 இந்திய சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 16 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நபர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இதையடுத்து, சிகிச்சை முடிந்த 16 பேரும் இந்தியாவிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த இந்திய சுற்றுலா பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த உடல்களை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வியட்நாம் பிரதமர் லே மின் ஹுங் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/16-indians-survived-the-vietnam-boat-accident-reports-indicate-they-will-return-home-soon




