செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் பேசுகையில், “இந்த பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. தற்போது இந்தப் பள்ளிக் கட்டடம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. கட்டடத்தின் சுவர் சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. சிறிது மழை பெய்தாலும் வகுப்பறையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமன்றி, பள்ளிக் கட்டடத்தின் மீது செடிகள் முளைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளிக்கு பின்புறம் மிகவும் புதராக இருப்பதால் அடிக்கடி பாம்பு வருகிறது. இதனால் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் பயிற்றுவிக்க மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள். பள்ளி இதற்கு முன்பு பள்ளி குழந்தைகள் அருகில் இருந்த கட்டடத்தில் பயின்று வந்தார்கள். அது இன்னும் மோசமான நிலையில் உள்ளது. ஒருமுறை பள்ளியில் பயிலும் குழந்தை மீது அதிலிருந்து ஓடு விழுந்துவிட்டது. அப்போது முதல் அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்துவதில்லை. மேலும், இங்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்தப் பள்ளியில் உள்ள கழிவறையைப் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதியையும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளி அதுமட்டுமன்றி, பள்ளி சாலையை ஒட்டியே உள்ளதாலும் தடுப்புச்சுவர் இல்லாததாலும் விபத்து ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது. நாங்களும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். பள்ளியில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இதனைச் சரி செய்து தர மறுக்கிறார்கள். எனவே, இந்தப் பள்ளிக் கட்டடத்தினை விரைந்து சரி செய்ய வேண்டும்” என்றார். மேலும் தகவலுக்காக அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியிடம் விசாரித்தபோது, ``இந்தப் பள்ளிக் கட்டடத்தில் தற்போது வகுப்புகள் நடத்துவதில்லை. மேலும், இந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்தித் தருமாறு பலமுறை நாங்களும் மனு கொடுத்துள்ளோம். கட்டப்பட்டு பல வருடங்கள் ஆவதால் அது மிகவும் சிதிலமடைந்துள்ளது. மேலும், தேர்தலின் போது அமைக்கப்பட்ட சாலை, பள்ளியின் நிலமட்டத்தை விட உயரமாகப் போடப்பட்டுள்ளதால், சிறு மழை பெய்தாலும் வகுப்பறை முழுவதும் மழைநீரால் நிரம்பிவிடுகிறது. பள்ளி சாலை அமைப்பதற்கு முன்பு அவ்வாறு மழைநீர் வகுப்பறையில் தேங்கவில்லை. அதேபோன்று, இந்தப் பள்ளிக் கழிவறையைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை. இந்தப் பள்ளிக் கட்டடத்தை இடித்துத் தருவதாகக் கூறினார்கள். அதை மட்டும் செய்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் கமலக்கண்ணனிடம் கேட்டபோது, “நாங்களும் சென்ற வாரம் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம். பள்ளிக் கட்டடத்தை விரைவில் சரி செய்து விடுவோம்; பின்புறம் உள்ள புதர்களைச் சுத்தம் செய்யக் கூறியுள்ளோம். விரைவில் சரி செய்து தரப்படும்" என்று அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/thimmavaram-school-old-building-must-be-demolished-compound-wall-needed-locals-demand



