கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ‘மங்களம்’ என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை, தமிழகத்தின் சிறந்த கோவில் யானைகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்ற பெருமைக்குரியது ஆகும். 80-ஆவது சுதந்திர தின விழா மூவர்ண அலங்காரம்நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ஆதி கும்பேஸ்வரர் கோவில் வளாகத்திலும் சுதந்திர தின விழா சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. விழாவையொட்டி, மங்களம் யானைக்கும் தேசபக்தி வண்ணம் பூசப்பட்டது. அதன் உடம்பில் பிரம்மாண்ட மூவர்ண தேசிய கொடி போர்த்தப்பட்டது. மேலும், அதன் நெற்றியில் அசோக சக்கரம் மற்றும் மூவர்ண மலர்களால் ஆன சிறப்பு மாலை அணிவிக்கப்பட்டு, கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டது. கம்பீர நடை இதனைத் தொடர்ந்து, பாகன்கள் துணையோடு யானை மங்களம் கோவில் பிரகாரத்தில் கம்பீர நடைபோட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யானையின் அழகை கண்டு மெய்சிலிர்த்தனர். ஊர்வலத்தின் நிறைவாக, கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடி கம்பத்தின் அருகே மங்களம் யானை வந்து நின்றது. துதிக்கை உயர்த்தி வீர வணக்கம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், தனது துதிக்கையை உயர்த்தி, தேசிய கொடிக்கு கம்பீரமாக வீர வணக்கம் செலுத்தியது. இந்த அரிய காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து மகிழ்ந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-temple-elephant-salutes-national-flag




