டுப்லின், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2-0 ஆப்கானிஸ்தான் முன்னிலை அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 7ம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து 10ம் தேதி நடந்த 3வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் இன்று மோதல் இந்நிலையில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. பெல்பாஸ்ட் நகரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்து வரும் ஆப்கானிஸ்தான் 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற ஆப்கானிஸ்தானும், முதல் வெற்றியை பதிவு செய்ய அயர்லாந்தும் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/4th-odi-ireland-chooses-to-bowl




