கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். வரலாற்றுச் சிறப்பு மிக்கது இந்தத் தலம். இங்கு நடந்த போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான். இங்கே சோழர்கள் திருப்பணி செய்த ஆலயம் ஒன்று உண்டு. மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்தில் இறைவன் சாட்சிநாதராக அருள்பாலிக்கிறார். மேலும் இந்த ஆலயத்தில் அருளும் விநாயகப்பெருமான் பல்வேறு சிறப்புகளை உடையவர். வாருங்கள் அவர் குறித்த அற்புதத் தகவல்களைக் காண்போம். பிரளயம் காத்த விநாயகர் திருப்புறம்பியம் கோயிலில் முகப்பு மண்டபத்தில் சந்நிதி கொண்டிருக்கும் இந்த விநாயகருக்கு 'பிரளயம் காத்த விநாயகர்' என்பது திருநாமம். இவரை தேனபிஷேகப் பிள்ளையார் என்றும் சிறப்பிக்கிறார்கள் பக்தர்கள். காரணம், விநாயகர் சதுர்த்தியின்போது விடிய விடிய இந்தப் பிள்ளையாருக்கு தேனபிஷேகம் நடைபெறும். தேனினும் இனிய பிரணவ ஸ்வரூபனுக்கு, லிட்டர் லிட்டராக, தேனை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். ஆனால் எவ்வளவு ஊற்றினாலும்அதில் ஒரு துளிக்கூடக் கீழே வழியாது. விநாயகப் பெருமான் எல்லாவற்றையும் குடித்துவிட்டுப் பிரகாசமாக வீற்றிருப்பார். தேன் எல்லாம் விநாயகர் திருமேனிக்குள் உறிஞ்சப்பட்டு விடும். விழுப்புரம் மாவட்டம் தீவனூர் லிங்க வடிவ விநாயகர் - காரியவெற்றியைக் காட்டி அருளும் நவகிரக சந்நிதி! யார் இந்த விநாயகர். இவர் இங்கே எழுந்தருளியது எப்படி என்பது குறித்து தலபுராணம் சுவாரஸ்யமான புராண சம்பவம் ஒன்றைச் சொல்கிறது. ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் அந்தப் பிரளயத்தை அடக்கிக் காத்தாராம். அதற்கு நன்றிக்கடனாக கடல் பொருட்களால் அதாவது சிப்பி, கிளிஞ்சல், கடல் நுரை போன்ற பொருள்களை வைத்து, தேவேந்திரன் விநாயகர் திருமேனியைப் பிடித்துவைத்து வழிபட்டதாக ஐதீகம். ஸ்ரீசாட்சிநாதர் இவரை வழிபட்டால், பிரளயம் போன்று வரும் துன்பங்களையும் சடுதியில் போக்கி நம்மைக் காப்பாற்றுவார். இவரருளால் தேன் போன்று இனிமையான வாழ்வைப் பெறலாம் என்பது ஐதிகம். பொதுவாக பிரளய காலத்தில் ஈசனுக்குள்ளே சகலமும் ஒடுங்கும். பிரளயத்தில் இருந்து சகலத்தையும் ஈசன் காத்தருள்வார் என்பார்கள். பிரளயம் காத்த விநாயகரான இவர் ஈசனின் திருப்பணியை இங்கே செய்கிறார் என்கிறார்கள். பிரளயம் உண்டானபோது ஏழு கடல் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தார். அதனால் தேவர்கள் இந்தக் கணபதியைப் பிரதிஷ்டை செய்து பிரளயம் காத்த விநாயகர் எனப் போற்றினார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஸ்ரீஉக்தவேதீஸ்வரர்: திருமண வரம் தரும் தலத்தில் சுயம்வரபார்வதி ஹோமம்! புறம்- வெளி; பயம்- நீர்; பிரளய வெள்ளம் ஊரில் புகாமல் நின்றமையால் புறம்பயம் (புறம்பியம் என்று மருவிவிட்டது). அதாவது பிரளயத்துக்குப் புறம்பாய் இருந்ததால் இந்த ஊருக்குத் திருப்புறம்பியம் என்று பெயர் ஆனது. மேலும் இத்தலத்தில் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல் முக்கியமானது. பெண் ஒருத்திக்காக இந்தத் தலத்தில் உள்ள லிங்கம், வன்னி மரம், கிணறு, மடைப் பள்ளி அனைத்தும் மதுரைக்குச் சென்று சாட்சி சொன்னதாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது. எனவே, இறைவன் பெயர் ஸ்ரீசாட்சிநாதர் எனும் சாட்சீச்வரர். அம்பிகை திருநாமம் கரும்படு சொல்லி என்பதாகும். கரும்பன்னசொல்லி அம்மை தட்சிணாமூர்த்தியின் 24 முக்கிய தலங்களுள் இதுவும் ஒன்று. கோயிலுக்கு விறகு வெட்டித் தந்த ஏழைக்கு குருவாக தட்சிணாமூர்த்தியே அருள்பாலித்த தலமிது. சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தி அக்னி உபதேசம் வழங்கிய தலமும் இது. இங்கு சாட்சிநாதேஸ்வரர், சட்டநாதர் அருளோடு குருவின் அருளும் நிறைந்து இருப்பதால் இங்கு வந்து வேண்டினால் வழக்குகள் சாதகமாகும். மோதல்கள் சுமுகமாகும். உறவுச் சிக்கல்கள் நீங்கும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் உடனடியாகத் தீர்வு பெறும். வாங்குவது விற்பது தொடர்பான இழுபறியும் நீங்கும். திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கலங்காமல் காத்த விநாயகர்: தீராத பிரச்னைகளும் தீர்க்கும் கணபதி சந்நிதி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/spiritual/temples/thirupurambiyam-pralayam-kaatha-vinayagar




