ராய்ப்பூர் கனமழையை முன்னிட்டு உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், உத்தர பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது. இயல்பு வாழ்க்கை பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. சாலை போக்குவரத்தும் முடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்பான விபத்துகளும் ஏற்பட்டு உள்ளன. இதேபோன்று சத்தீஷ்காரில் கடந்த 2 நாட்களில் பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திராவதி, மகாநதி மற்றும் ஷிவ்நாத் உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பல்வேறு நகரங்களும் நீரில் மூழ்கியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/heavy-rain-holiday-declared-for-schools-in-uttar-pradesh-and-chhattisgarh




