நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை இறந்துவிட்டதாக நினைத்து அருகில் சென்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாடுகாணி டான் டீ தேயிலைத் தோட்டத்தில் யானை ஒன்று படுத்துக் கிடந்ததை பார்த்த தொழிலாளர்கள், அது இறந்துவிட்டதாக நினைத்து அருகில் சென்றனர். அருகில் சென்று பார்த்தபோது, அந்த யானை அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், விழித்துக்கொண்டால் நமக்கு என்ன கதி ஏற்படுமோ என நினைத்தவாறு அங்கிருந்து உடனடியாக விலகிச் சென்றனர். கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஓய்வெடுப்பது வழக்கமாக உள்ளது. மனிதர்களைப் போல படுத்து உறங்கிக் கொண்டிருந்த யானையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-shock-awaited-those-who-approached-a-wild-elephant-thinking-it-was-dead




