சென்னை, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்க்க நடிகை திரிஷா, சென்னை ரோகிணி திரையரங்குக்கு வந்திருக்கிறார்.இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு ‘ஜனநாயகன்’ படம் வெளியாகியுள்ளதால் டைட்டில் கார்டில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்” என வெளியானது. இதில், அவர் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்த சைகையும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்த தவெக அமைச்சர்கள் விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ என்பதாலும் பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி படம் வெளியாவதாலும் திரையரங்குகளில் ரசிகர்கள் பலர் மிகுந்த ஆவலுடன் படத்தை கண்டு ரசித்தனர். இந்த படத்தை தவெக அமைச்சர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துள்ளனர். தமிழகத்தில் காலை 9 மணி முதல் ‘ஜனநாயகன்’ திரையிடப்பட்டு வரும் நிலையில் சுமார் 11 மணியளவில் நடிகை திரிஷா, தோழிகளுடன் திரையரங்குக்கு வருகை தந்துள்ளார். திரையரங்கில் திரிஷாவைப் பார்த்ததும், ‘ஜனநாயகன்’ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய நிலையில், எதற்கும் பதிலளிக்காமல் திரிஷா திரையரங்குக்குள் சென்றுவிட்டார். திரிஷாவுக்கும் விஜய்க்குமான உறவு திரிஷாவுக்கும் விஜய்க்குமான உறவு குறித்து ஏற்கனவே இணையத்தில் பலவாறான தகவல்கள் வைரலாகி வருகிறது. இருவரும் ஒன்றாக ஒரே மாதிரி உடையணிந்து ஒரு திருமணத்திற்கு சென்றது, விஜய் பிறந்தநாளுக்கு திரிஷா சர்ப்ரைஸ் செய்வது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் பேசு பொருள் ஆகி வருகிறது. திரிஷாவின் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், இது விஜய்க்கு கடைசி படம் எனும் உண்மையும் அனைவருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது. Trisha | Jananayagan | `ஜனநாயகனை’ பார்க்க வந்த திரிஷா. நடுவில் புகுந்து ஒருவர் செய்த செயல் — Thanthi TV (@ThanthiTV) July 23, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-trisha-watched-the-movie-jananayagan-at-rohini-cinema




