லண்டன், அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையே கடந்த 1ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து, அயர்லாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இங்கிலாந்தின் டர்பே நகரில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அயர்லாந்து 165 ரன்கள் இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 47 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஏமி ஹண்டர் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீராங்கனை இசி வாங் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து வெற்றி இதனை தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 23 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அயர்லாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து தொடக்க வீராங்கனை மயா பவுசியர் அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/second-odi-england-crush-ireland




