சேலம் மாவட்டம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெருவில் வசித்து வரும் கோயில் பூசாரி ரமேஷ் என்பவர், கடந்த ஆகஸ்ட் 31 அன்று தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீட்டின் குழாயைத் திறந்தபோது குடிநீரில் கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. சந்தேகமடைந்த அவர், வீட்டின் மொட்டை மாடியில் இருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளைச் சோதித்துள்ளார். அப்போது, தொட்டிக்குள் மூட்டைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். கொல்லப்பட தங்கமணி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர், பெண் ஒருவரைக் கொலை செய்து அவரின் கை, கால், தலை, மார்பு உள்ளிட்ட உடல் பாகங்களை 8 துண்டுகளாக வெட்டப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தை உறுதி செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் அடுத்த 24 மணி நேரத்தில் 3 நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: சிக்கிய `4' முடிகளால் திருப்பம்; 17 ஆண்டுகளாக தொடரும் விசாரணை! இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், "நந்தினி என்பவரும் மாலிக் பாஷாவும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பணத் தேவை இருந்ததால், நந்தினிக்கு நன்கு அறிமுகமான தங்கமணி என்கிற பெண் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். ஆகஸ்ட் 28 அன்று தங்கமணிக்கு நல்ல சம்பளத்தில் சமையல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அரிசிபாளையத்தில் உள்ள தனது சித்தி பிரபாவதி வீட்டிற்கு நந்தினி அவரை வரவழைத்துள்ளார். வீட்டின் மொட்டை மாடி பகுதியில் வைத்து நந்தினியும், மாலிக் பாஷாவும் சேர்ந்து தங்கமணியின் தலையில் மரக்கட்டையால் பலமாகத் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள். பின்னர், அவரிடமிருந்த நகைகளைப் பறித்துள்ளனர். மாலிக் பாஷாவின் நண்பரான சிவராமன், உடலை மறைக்க கசாப்புக் கத்தி போன்ற ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். கொலையை மறைப்பதற்காக, தங்கமணியின் உடலை மாலிக் பாஷா 8 துண்டுகளா வெட்டி சாக்கு மூட்டைகளில் கட்டியுள்ளார். கைதான நந்தினி அரிசிபாளையம் பகுதியில் வீடுகள் மிக நெருக்கமாக இருந்ததால், யாருக்கும் தெரியாமல் உடலை எடுத்துச் செல்ல முடியாது எனக் கருதி, பக்கத்து வீட்டு மாடிகளுக்குச் சென்று அங்கிருந்த 3 தண்ணீர் தொட்டிகளுக்குள் மூட்டைகளைத் தனித்தனியாகப் போட்டுவிட்டுத் தப்பியுள்ளனர். சி.சி.டி.வி காட்சிகளையும், செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து 24 மணி நேரத்திற்குள் 3 பேரைக் கைது செய்தோம். கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளிடமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 4 சவரன் நகைகள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தோம். அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளோம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர். டைம்ஸ் சதுக்கம்: பேங்க் ஆஃப் அமெரிக்கா பெண் அதிகாரி கொலை - நொடியில் முடிந்த இளம் தாயின் வாழ்க்கை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/salem-woman-hacked-into-8-pieces-and-bundled-in-sack-for-four-sovereigns-of-gold-jewelry




