பெண்கள் தங்கள் தலைமுடியை பராமரிப்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். இப்போது அதிகமான பெண்கள் முடியை நீளமாக வளரவிடாமல் வெட்டி விடுகிறார். ஆனால் சில பெண்கள் தங்களது முடி மிகவும் நீளமாக இருக்கவேண்டும் என்று விரும்புவதுண்டு. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது தலைமுடியை 9 அடி நீளத்திற்கு வளர்த்து இருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்டிவானி என்ற இடத்தை சேர்ந்தவர் ரேனு தாரியல். இவர் தனது தலைமுடிக்கு பிரத்யேக கவனம் செலுத்தி வளர்த்து வருகிறார். தற்போது அவரது தலைமுடி 9 அடி நீளத்திற்கு வளர்ந்துவிட்டது. இந்த சாதனை இப்பொது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கின்னஸ் சாதனை புத்தக அதிகாரிகள் நேரில் வந்து ரேனுவின் முடி நீளத்தை அளந்து சென்றனர். இதில் ரேனுவின் முடி நீளம் 271.50 செண்டிமீட்டர் நீளம் இருந்தது. இதற்கு முன்பு 257 செண்டி மீட்டர் முடிதான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது. அந்த சாதனையை ரேனு முறியடித்து புதிதாக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து ரேனு கூறுகையில்,''2015-ஆம் ஆண்டில் இருந்து தலைமுடியை வளர்க்கத் தொடங்கினேன். அதன்பிறகு நான் அதை வெட்டவே இல்லை. நீண்ட முடி என்பது அழகு மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதால் அதனால் ஈர்க்கப்பட்டு முடியை வளர்க்க முடிவு செய்தேன். ஒன்பது அடி நீளமுள்ள முடியைப் பராமரிப்பதற்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. முடியை ஆரோக்கியமாகவும் சேதமின்றியும் வைத்திருக்க, அதைக் கழுவுவதற்கும், உலர்த்துவதற்கும், சிக்கல்களை நீக்குவதற்கும் பல மணிநேரங்களைச் செலவிடுகிறேன். முடிகளை பராமரிக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு பதிலாக, இயற்கையான கூந்தல் பராமரிப்பு முறையைப் பின்பற்றி, வீட்டிலேயே கூந்தல் எண்ணெய்களையும், ஷாம்புகளையும் தயாரிக்கிறேன். மேலும், இந்த பாரம்பரிய அழகு குறிப்புகளைத் தனது ஆன்லைன் தளத்தில் தன்னை பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து, மற்றவர்களையும் இரசாயனங்கள் இல்லாத கூந்தல் பராமரிப்பை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறேன்''என்று தெரிவித்தார். ரேணுவின் சாதனை அவரை இணையத்திலும் பொதுவெளியிலும் பிரபலமான ஒருவராக மாற்றியுள்ளது. மக்கள் பெரும்பாலும் அவரது நீண்ட முடியைக் கண்டு வியப்படைகிறார்கள். தனது சாதனை ஒரு உலக சாதனையைத் தாண்டி இன்னும் பெரியதொரு விஷயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று ரேனு விரும்புகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/trending/uncut-for-10-years-uttarakhand-woman-with-9-foot-long-hair-enters-guinness-world-records




