சென்னை, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;- “தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கங்கள். கழகத்தில் என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் மாவட்ட கழக செயலாளராக செயல்படுவதற்கும் சட்டமன்ற தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் இனிமேலும் என்னால் கழகத்தில் பயணிக்க என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்பதை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/former-minister-thoppu-venkatachalam-quits-dmk




