தமிழகத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் புத்தொழில் (Startup) நிறுவனங்களைத் தொடங்கி சாதித்து வருகின்றார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்-கள் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் (Department For Promotion Of Industry and Internal Trade) அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 15,037 ஆக உயர்ந்து இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் பெண் தொழில் முனைவோரின் பங்களிப்பு ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொழில்துறை தரவுகளின்படி பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிககை 7,572 ஆகவும், ஆண்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 7,465 ஆகவும் உள்ளன. இதன் மூலம் பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப்-கள் கூடுதலாக உள்ளன. ஸ்டார்ட் அப் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சமூகத்திலும், மற்ற துறைகளிலும் பாலினச் சமத்துவம் மெதுவாக உயர்ந்து வரும் நிலையில் ஸ்டார்ட் அப் துறையில் பாலின சமத்துவம் வேகமாக அதிகரித்து வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவன வளர்ச்சியில் தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கு என்ற கணக்கில் 5,134 ஸ்டார்ட் அப்-களுடன் சென்னை வட்டாரம் தொடர்ந்து முதல் இடத்திலும், 2011 என்ற எண்ணிக்கையில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 1,318 என்ற எண்ணிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. திருவள்ளூர்- 916, செங்கல்பட்டு - 815, மதுரை - 497, திருச்சி - 446, சேலம் - 403, ஈரோடு - 350, கிருஷ்ணகிரி - 239 என்ற எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மார்பக அளவு குறைப்பு. அதிகரிக்கும் அறுவை சிகிச்சை. சுமையிலிருந்து சுதந்திரம் பெறும் பெண்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/business/women-outpace-men-success-in-running-start-ups-tamil-nadu-leads-at-national-level




