சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் கடுமையாகக் குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. சாதாரண நுகர்வோரும் முகவர்களும் இதனால் அன்றாடம் அவதியுற்று வரும் வேளையில், ஜோசப் விஜய் அரசு எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்று உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறித் தப்பித்துக் கொள்ள முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதிகக் கொழுப்பில்லா இதர சத்துகள் (SNF) நிறைந்த பாலுக்குத் தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.50 வழங்கும்போது, ஆவின் வெறும் ரூ.35 மட்டுமே வழங்குவதால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு மாறுகின்றனர், இதுவே தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளையும், ஏழை எளிய மக்களையும் ஒரே நேரத்தில் தவெக அரசு தவிக்கவிட்டுள்ளது. வலியுறுத்தல் எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிர்வாகம் உடனடியாக உயர்த்தி வழங்கி, பால் கொள்முதலை தடையின்றி தொடர்வதோடு, பொதுமக்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைப்பதை முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-shortage-producers-should-be-paid-more-nainar-nagendran




