சென்னை, பாலிவுட் நடிகர் சல்மான் கான், ஜோத்பூர் மத்திய சிறையில் கழித்த கடினமான நாட்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சிறையில் சந்தித்த சிரமங்கள் இதுகுறித்து பேசிய சல்மான் கான், "பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறைக்கு சென்றபோது, ஒரு சிறிய அறையில் 50 முதல் 60 பேர் வரை அடைக்கப்பட்டிருந்தோம். அனைவருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தது. அங்கு எப்போது பார்த்தாலும் பல்லிகள் ஓடிக்கொண்டிருக்கும். சாக்கடை நீரும் கழிவுகளும் நிரம்பி வழியும் " என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். கருப்பு மான் வேட்டையாடிய வழக்கு 1998-ம் ஆண்டு 'ஹம் சாத்-சாத் ஹைன்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, ராஜஸ்தானின் ஜோத்பூர் அருகே கருப்பு மான்களை (Blackbuck) வேட்டையாடியதாக சல்மான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஜோத்பூர் மத்திய சிறையில் வெவ்வேறு காலகட்டங்களில் (1998, 2006, 2007 மற்றும் 2018) மொத்தம் சுமார் 18 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/salman-khan-recollects-jail-time-small-area-50-60-people-indian-style-commode-lizards




