தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்விரோதம் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்தனமாரி (வயது 45). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரது ஆடுகளும், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சண்முகராஜ் என்பவரது ஆடுகளும் ஒரே தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ஆடுகளை தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லுமாறு சந்தனமாரி கூறியதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. பெண் வெட்டிக்கொலை கடந்த 15.5.2015 அன்று சந்தனமாரி வழக்கம்போல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சண்முகராஜ் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த சண்முகராஜ், சாதி பெயரைச் சொல்லி திட்டியதுடன், சந்தனமாரியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்தனர். ஆயுள் தண்டனை இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முழுமையாக முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சண்முகராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வஷித்குமார் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் மணிகண்ட பிரபு ஆஜரானார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-hacked-to-death-in-thoothukudi-goat-herder-gets-life-sentence




