புதுடெல்லி, இ 20 (E20) பெட்ரோலை நுகர்வோர் எந்தவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடுமையான விதிமுறைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனைகளுக்குப் பிறகு, எரிபொருளின் தரம் மத்திய அரசின் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. E20 பெட்ரோலில் 500 பிபிஎம் அளவுக்கு குளோரைடு இருப்பதாக கூறப்படும் புகார்கள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குளோரைடு அளவு 0 முதல் 3 பிபிஎம் வரையிலான பாதுகாப்பான அளவிலேயே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் மேலும், பெட்ரோல் பங்க்குகளில் தினசரி 8 முதல் 12 முறை தண்ணீர் கசிவு தொடர்பான சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் CHT அமைப்பின் கூட்டுப் பணிக்குழு, நாடு முழுவதும் உள்ள 80 எத்தனால் ஆலைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு எரிபொருளின் தரத்தை உறுதி செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், E20 பெட்ரோல் தொடர்பாக நுகர்வோர் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து E20 பெட்ரோலைப் பயன்படுத்தலாம் என்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/e20-petrol-can-be-used-without-hesitation-oil-companies-confirm




