சென்னை, தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ. 14,240-க்கும் விற்பனையானது. அதேபோல, நேற்று முந்தினமும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530-க்கும், கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,13,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/what-is-the-current-price-of-ornamental-gold-in-chennai-today-2




