பெங்களூரு அருகே துமகூரு ரோட்டில் மாதவரா பகுதியில் சர்வதேச கண்காட்சி மையம் அமைந்துள்ளது. இங்கு 'விண்வெளியின் அடுத்த அத்தியாயம்: ஆய்வு, அறிவியல், புதுமை' என்ற தலைப்பில் விண்வெளி கண்காட்சி நடந்து வருகிறது. இதையொட்டி நடந்த கருத்தரங்கில் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:- எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளி பயணம் மேற்கொள்ளவும். நிலவு மட்டுமல்லாது அதை தாண்டி செல்லவும் சர்வதேச அளவில் ஒன்றிணைந்து ஒத்துழைப்போடு செயல்படுவது அவசியம். அப்போது தான் விண்வெளி சாதனையில் மனிதகுலம் வெற்றி அடையும். விண்வெளி ஆய்வுகளை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டு பிரச்சினைகளை தீர்த்து அதன்மூலம் அனைவரும் பயன்பெற முடியும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/global-cooperation-is-essential-in-space-exploration-sunita-williams




