சென்னை, இஸ்ரோவின் 9 ஊழியர் சங்கங்கள், ராக்கெட் தயாரிப்பு மற்றும் ஏவுதள செயல்பாடுகள் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தனியாருக்கு மாற்றப்படுவதாக கவலை தெரிவித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணனிடம் அதிகாரப்பூர்வ விளக்கம் கோரி கடந்த 4-ந்தேதி கடிதம் எழுதின. இஸ்ரோவின் எதிர்கால பங்கு, தற்போதைய ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, எதிர்கால ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை குறித்து சங்கங்கள் கேள்வி எழுப்பி இருந்தன. இருந்தன. இந்த நிலையில் இஸ்ரோ நேற்று இதுகுறித்து எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கம் வெளியிட்டது. அதில், "இஸ்ரோ தனியார் மயமாக்கப்படாது. அதன் முக்கியத்துவம் குறைக்கப்படாது. அடுத்த தலைமுறை விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோவின் பங்கு மேலும் வலுப்படுத்தப்படும். அதே நேரம் ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களை தொழில்துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் போட்டி முறையில் உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் அறிவியல் மனிதவளம் மற்றும் வளங்களை புதிய தொழில்நுட்பங்கள், சந்திரன் மற்றும் கோள்கள் ஆய்வில் பயன்படுத்த முடியும்” என்று கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-will-not-be-privatized-clarification-given-to-employees-union-members




