விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வியாபாரம் செய்யப்பட்டு வந்துள்ளது. மேல் பார்வைக்குத் தண்ணீர் வியாபாரம் நடப்பது போலக் காட்டிவிட்டு, தோட்டத்திற்குள் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. வெடி விபத்து இங்கு ரகசியமாகப் பட்டாசு தயாரிக்கப்படுவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், ராம்பிரகாஷைக் கண்டித்ததுடன் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், புகாரைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த பயங்கர வெடி விபத்தில் நிகழ்விடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணிகளிலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதப் பட்டாசுத் தயாரிப்பால் உரிமையாளர் ராம் பிரசாத் மற்றும் இன்னாசிமுத்து, ஐயப்ப ராஜ், பாண்டிதுரை என 4பேர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/illegal-firecracker-manufacturing-in-a-tin-shed-in-sivakasi-tragedy-claims-four-lives




