சென்னை, மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. மருத்துவ கல்லூரி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 13,999 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அந்தவகையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்துகிறது. தரவரிசை பட்டியல் அதன்படி, நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவு பெற்றது. அதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்தனர். மொத்தம் 72,627 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. தரவரிசை பட்டியல் எப்போது வெளியிடப்படும்? கலந்தாய்வு எப்போது தொடங்கும்? என மாணவ-மாணவிகள், அவர்களுடைய பெற்றோர் எதிர்பார்த்த நிலையில் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது. மேலும், கலந்தாய்வு குறித்த அட்டவணையும் வெளியாக இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rank-list-for-medical-courses-released-today




