சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புது கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண்மணியிடம், தாசில்தார் என செல்போனில் தொடர்புகொண்ட நபர் ஒருவர், ``கொரோனா போன்ற புதுவித நோய் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள மொட்டை அடிக்க வேண்டும். அதற்கு ஊக்கத்தொகையாக பெண்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஆண்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்" எனக் கூறியிருக்கிறார். அதை உண்மையென நம்பிய பெண்கள் சுமார் 20 பேர், இரவோடு இரவாக மொட்டை அடிக்கத் தயாரான நிலையில், 3 பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொண்டு தொகையை கேட்க முயற்சி செய்துள்ளனர். கைதான சதீஷ் குமார் ஆனால், அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை தாமதமாக அறிந்த பெண்கள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார் என்கிற 40 வயது நபரைக் கைதுசெய்து விசாரித்துள்ளனர். அப்போது, பேராசை கொண்ட நபர்களை பிராங்க் செய்யவே இப்படி நடந்து கொண்டேன் என வாக்குமூலம் அளித்திருக்கிறார் அந்த நபர். பெண்களை மோசடி செய்து மொட்டை அடிக்க வைத்த சதீஷ்குமார் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/police-arrested-man-who-pretended-as-govt-officer-and-harrassed-women



