ஓடிடி-யில் வரவேற்பை அள்ளிக் கொண்டிருக்கும் 'வதந்தி சீசன் 2'வை இயக்கியவர் ஆண்ட்ரூ லூயிஸ். இதற்கு முன் 'கொலைகாரன்' படத்தை இயக்கியவர். த்ரில்லர் பட இயக்குநராக பெயரெடுத்துவிட்ட ஆண்ட்ரூவின் முதல் படமான 'லீலை' ஒரு காதல் படமாகும். கடந்த 2012ல் வெளியான இதில் ஷிவ் பண்டிட், மானசி பரேக், சந்தானம், சுஹாசினி குமரன், லட்சுமி ராமகிருஷ்ணன் எனப் பலரும் நடித்துள்ளனர். அது சரி இப்போது அதெற்கென்ன என்கிறீர்களா? 'லீலை' வெளியாகி 14 வருடத்திற்குப் பிறகு இயக்குநருருடன் ஹீரோவான ஷிவ் பண்ட்டிட்டுடன், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சுஹாசினி ராஜூ என மூவரும் மீண்டும் ரீயூனியன் ஆகியிருக்கின்றனர். ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படத்திலும் நடித்திருக்கிறார், ஷிவ் பண்டிட். இந்நிலையில் ரீயூனியன் பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸிடம் பேசினோம். வதந்தி 2 ``எங்களோட 'வதந்தி 2'வின் ப்ரீமியர் ஷோவுக்கு 'லீலை'யில் நடிச்சவங்களையும் அழைச்சிருந்தேன். ஷிவ் பண்டிட் சென்னையில்தான் இருந்தார். அப்புறம், சுஜா கேரக்டரில் நடிச்சிருந்த சுஹாசினி குமரனும் வந்திருந்தாங்க. சோஷியல் மீடியாவுல அவங்களை ஹீரோயின் மானசி பரேக்னு நினைச்சிட்டாங்க. நாங்க கேஷுவலா எடுத்துக்கிட்ட போட்டோவை பதிவிட்டிருந்தது பெரிய வைரலாகிடுச்சு. ஹீரோ ஷிவ், இந்த படத்துல வந்தது சுவாரசியமான கதை. மாதவன் மாதிரி சாக்லெட் பாயை தேடிக்கிட்டிருந்த போது விளம்பர படத்துல இவரை பார்த்தேன். அவரை தொடர்பு கொண்ட போது அவர் சென்னையில் அப்போ ஐபிஎல் முதல் தொடர் ஆரம்பிச்ச டைம் அது. அதோட தொகுப்பாளரா வந்திருந்தார். தமிழ்ல நடிக்கணும்னு அவரும் ரொம்ப ஆர்வமா இருந்தார். 'நேசிப்பாயா' படத்துலகூட நடிச்சிருந்தார். இப்போ 'சிக்மா' படத்துலேயும் நடிச்சிருக்கார். இப்போ டீச்சர் வச்சு, தமிழ் கத்துக்கிட்டிருக்கார். சுஹாசினி குமரனை விஜய் டி.வி.யின் டான்ஸ் ஷோவில் பார்த்து, நடிக்க வச்சோம். அவங்க நல்ல டான்ஸர். ஷிவ் பண்டிட், சுஹாசினி ஆண்டரூ லூயிஸ் 'லீலை' வெளியாகி 15 வருஷமாகுது. இன்னிக்கும் இந்த படத்தை ஞாபகம் வச்சு மக்கள் கொண்டாடுறது சந்தோஷமா இருக்கு. நிறைய பேர் அதோட ''ரீ ரீலீஸ் எப்போ? "னு கேட்குறாங்க. என்னோட முதல் படத்துக்கு இப்படியான வரவேற்பை நினைச்சு பார்க்கவே சந்தோஷமா இருக்கு. ஹீரோயின் மானசி பரேக் இப்போ மராத்தியில் நடிச்சிட்டிருக்காங்க. சமீபத்துல கூட அவங்களோட மராத்தி படத்துகாக அவங்களுக்கு தேசிய விருது கிடைச்சது. சமீபத்துல மானசிகிட்ட பேசும் போது, 'இந்தியிலும், தமிழிலும் பைலாங்குவலா ஒரு படம் பண்ணலாம்'னு சொல்லியிருக்காங்க. இப்போ அவங்க தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்காங்க. சீக்கிரமே மொத்த டீமுமே ரீயூனியன் பண்ணலாம்னு ஒரு திட்டம் இருக்கு!'' எனச் சொல்லும் ஆண்ட்ரூ லூயிஸ், விஜய் சேதுபதி ``'பாக்கெட் நாவல்' படப்பிடிப்பும் நிறைவடையப் போகுது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும் நானும் ரொம்ப வருஷத்து நண்பர்கள். நாங்க ரெண்டு பேருமே ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ்மேட்ஸ். புஷ்கர் - காயத்ரியும் எங்களோட காலேஜ் மேட்னால, நாங்க கதை எழுதினால், அதை எல்லோர்கிட்டேயும் பகிர்ந்துப்போம். 'இந்த கதை எப்படி வந்திருக்குது?'னு கருத்துக்கள் கேட்டு செதுக்கிக்குவோம். அப்படித்தான் 'பாக்கெட் நாவல்' கதை தியாகராஜாவுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 'இதை நான் பண்றேன்'னு தியாகராஜா என்கிட்ட கேட்டதும், எனக்கும் பெரிய சந்தோஷம். உடனே சம்மதிச்சிட்டேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த படம் பத்தி பேசலாம். நிறைய சுவாரஸியங்கள் இருக்கு'' என்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/vadhandhi-season-2-director-andrew-louis-shares-about-leelai-reunion-and-his-movie-pocket-novel-story-update




