இஸ்தான்புல், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. சமீபத்திய அமெரிக்க தாக்குதல்களால், பொதுமக்கள் உயிரிழந்ததாக டெஹ்ரான் தெரிவித்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்து வருகின்றன. அணுமின் நிலையம் இந்தநிலையில், ஈரானின் புஷஹ்ர் அணுமின் நிலைய வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அமெரிக்காவின் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் அணுமின் நிலையத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கோ அல்லது அணுஉலைக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கதிர்வீச்சு கசிவு போன்ற ஆபத்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. ஈரான் பதிலடி இதனிடையே அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத், பஹ்ரைன், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளை தாக்கியது ஈரான் ராணுவம். குவைத்தில் உள்ள அமெரிக்காவின் பாட்ரியோட் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு, கத்தாரில் உள்ள சாட்டிலைட் ஆண்டெனா மையம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/ஈரான்-அணுமின்-நிலையம்-மீது-தாக்குதல்




