புதுடெல்லி, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நினைவு அஞ்சலி தெரிவித்துள்ளார். மகாகவி நாள் சுப்பிரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார். தனது பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் கவிஞர் மட்டுமின்று எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். இவர் தனது 39 ஆம் வயதில் 1921 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் மறைந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் -11 பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த நாள் 'மகாகவி நாள்' என கடைபிடிக்கப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 105வது நினைவு நாள் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அஞ்சலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் புண்ய திதியில் அவருக்கு நினைவு அஞ்சலி. நவீன தமிழ் இலக்கியத்தின் தந்தையான பாரதி, தனது தேசியவாத கவிதைகள் மூலம் நமது விடுதலை இயக்கத்தில் ஒரு புது விதமான தேசபக்தி உணர்வை ஊட்டியவர். மேலும், தனது ஒளிமயமான தொலைநோக்கு பார்வையால், பாலின சமத்துவம், ஆன்மீக ஞானம் மற்றும் சமூக நீதிக்கான பாதையை இந்தியாவிற்கு காட்டினார். அவரது ஞானம், முன்னேற்றத்தின் சிகரத்தை நோக்கிய நமது பாதையை தொடர்ந்து எப்போதும் ஒளிரச் செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/mahakavi-subramania-bharatiyars-death-anniversary-amit-shah-pays-tributes




