ஆடிப்பூரத்தை முன்னிட்டு சைவ, வைணவ ஆலயங்களில் இன்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமாக, தங்கள் சக்திக்கு ஏற்ப, அம்மனுக்கு வண்ண வண்ண வளையல்களால் பிரமாண்டமாக அலங்காரம் செய்து அழகு பார்க்கின்றனர். ஆடிப்பூர சிறப்பு பூஜைகளுக்காக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், வளையல்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். சிறப்பு பூஜைக்குப் பின்பு அந்த வளையல்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. நன்செய் இடையாறு மகா மாரியம்மன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து 10,008 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகாமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முப்பந்தல் இசக்கியம்மன் வளையல் அலங்காரம் முப்பந்தல் இசக்கியம்மன் முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்கள் வழங்கிய வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த இசக்கியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெருந்துறை ஆதிபராசக்தி அம்மன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆதிபராசக்தி கோவிலில் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பெருந்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். வளையல் அலங்காரத்தில் பெரிய நாயகி அம்மன் நாகை கோதண்டராஜபுரம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் அமைத்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் துவங்கியதில் இருந்தே தினமும் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வளையல்களை காணிக்கையாக வழங்கினார். அதில் 5008 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/aadi-pooram-celebration-devotees-adorned-the-goddess-with-colorful-bangles




