திருத்தணி முருகப் பெருமானின் 5-ம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 4-ந்தேதி ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக தொடங்கியது. முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை திருவிழா கடந்த 6-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி மலைக்கோவிலில் குவிந்து முருகப்பெருமானை வழிபட்டனர். நடிகை ரோஜா நேர்த்திக்கடன் இந்நிலையில் நடிகை ரோஜாவும் திருத்தணி கோவிலுக்கு இன்று வந்திருந்தார். அடிக்கடி திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆடி கிருத்திகையின் போது ஒவ்வொரு ஆண்டும் காவடி சுமந்து சாமியை வழிபடுவார். கடந்த 14 வருடங்களாக காவடி எடுத்து வந்து ரோஜா நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார். சாமி தரிசனம் அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு நடிகை ரோஜா காவடி எடுத்து வந்தார். பக்தி பரவசத்துடன் 'முருகனுக்கு அரோகரா அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் காவடியை சுமந்தபடி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ரோஜா காவடி எடுத்து வந்த காட்சிகளை கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் செல்போனில் படம் பிடித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-roja-paid-her-vows-by-carrying-kavadi-at-the-thirutani-murugan-temple




