வாஷிங்டன், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திற்கு அருகே உள்ள பெரிங் கடலில்(Bering Sea), 15 வயது சிறுவன் தனது உறவினர்களுடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றான். ஆனால் அவர்கள் சென்ற படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவனுடன் சென்ற 2 உறவினர்களும் உயிரிழந்த நிலையில், நடுக்கடலில் சிறுவன் படகின் உடைந்த பாகத்தை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடி உள்ளான். மறுபுறம் கடலில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், 2 நாளாக நடுக்கடலில் உயிருக்கு போராடி வந்த சிறுவனை அமெரிக்க கடலோர காவல் படை பத்திரமாக மீட்டுள்ளது. சிறுவனுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/boat-capsizes-in-alaska-boy-survives-after-battling-for-two-days-in-open-waters




